இன்று வானை அவதானித்து எந்தெந்த விண்மீன்கள் சூரியனோடு சேர்ந்து பிறந்தன என்று எம்மால் கூற முடியாது. இந்தக் கொத்தில் இருந்த அனைத்து விண்மீன்களும் பால்வீதியைச் சுற்றிவருவதில் பல திசைகளில் பிரிந்து விட்டன!
உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குடியேறி வாழ்பவர்களே. இவர்கள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு இடம்பெயர்ந்து குடியேறியவர்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. வேலை தேடி செல்லலாம், அல்லது சுதந்திரத்தை நோக்கி செல்லலாம் அல்லது இயற்கைப் பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க இவர்கள் வேறு இடங்களுக்கு குடியேறலாம்.
தற்போது முதன் முறையாக வேறு ஒரு சூரியத் தொகுதியில் இருந்து எமது சூரியத் தொகுதிக்கு ஒருவர் இடம்பெயர்ந்து குடியேறியுள்ளார்.
வியாழனை தற்போது சுற்றிவரும் ஒரு சிறுகோளானது வேறு ஒரு சூரியத் தொகுதியில் இருந்து வந்து நமது சூரியத் தொகுதியில் மாட்டிக்கொண்ட ஒரு சிறுகோள்.
சூரியத் தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களும் (மேலும் பல பொருட்களும்) ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வரும் போது, இந்தக் சிறுகோள் மட்டும் அதற்கு எதிர்த் திசையில் சுற்றிவருகிறது.
எமது சூரியத் தொகுதியிலே பிறந்திருந்தால் மற்றைய பொருட்களைப் போல அதே திசையில் இது சுற்றிவந்திருக்கும். இப்படி இல்லாமல் வேறுபட்ட சுற்றுத் திசை இந்த சிறுகோள் வேறு ஒரு இடத்தில் இருந்து வந்திருக்கவேண்டும் என்று எமக்கு கூறுகிறது.
இதற்கு முதல் நாம் பல வேறு சூரியத் தொகுதிக்கு அப்பால் இருந்து வந்த விருந்தாளிகளை பார்த்திருந்தாலும் அவர்கள் எல்லோரும் விசிட் விட்டு சென்றுவிட்ட ஆசாமிகளே! ஆனால் இந்தப் புதிய சிறுகோள் நமது சூரியத் தொகுதியை நிரந்த வசிப்பிடமாக ஏற்றுக்கொண்டுவிட்டது. நமது சூரியத் தொகுதி பிறக்கும் போது அதனருகே பல சூரியத் தொகுதிகளும் சேர்ந்தே பிறந்தன. அவற்றிலும் பல கோள்கள் மற்றும் சிறுகோள்கள் எனக் காணப்பட்டன. இவற்றில் நமது சூரியத் தொகுதிக்கு மிக அருகில் இருந்த ஒரு தொகுதியில் இருந்த சிறுகோள் ஒன்றை வெற்றிகரமாக நமது சூரியனும் அதன் கோள்களும் சேர்ந்து தங்களது ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி ஈர்த்துக்கொண்டன.
இன்று வானை அவதானித்து எந்தெந்த விண்மீன்கள் சூரியனோடு சேர்ந்து பிறந்தன என்று எம்மால் கூற முடியாது. இந்தக் கொத்தில் இருந்த அனைத்து விண்மீன்களும் பால்வீதியைச் சுற்றிவருவதில் பல திசைகளில் பிரிந்து விட்டன!
M Sri Saravana, UNAWE Sri Lanka