சனி வாயுவால் உருவான கோள் என்பதால் அது நீரில் மிதக்கும்! ஆனால் பூமியோ பெரும்பாலும் பாறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்ணியலாளர்கள் குழு ஒன்று சனியைச் சுற்றிவரும் 20 புதிய துணைக்கோள்களை கண்டறிந்துள்ளனர்.
சூரியனில் இருந்து இருக்கும் ஆறாவது கோள் சனி. அதனைச் சுற்றியிருக்கும் பனியாலும் பாறைகளாலும் உருவான வளையம் சனிக்கு ஒரு சிறப்பு. தற்போது மிக அதிகமான துணைக்கோள்களை கொண்டுள்ள கோள் என்கிற பட்டமும் அதனையே சாரும்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பால் தற்போது சனிக்கு இருக்கும் துணைக்கோள்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. வியாழனுக்கு இருப்பது 79 துணைக் கோள்களே!
துணைக்கோள்கள் எனப்படுவது இயற்கையாகவே கோள் ஒன்றை சுற்றிவரும் விண்பொருள் ஆகும். எமது சூரியத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கோள்கள், உதாரணத்திற்கு பூமி, குறைந்தது ஒரு துணைக்கோளையாவது கொண்டுள்ளது. சில கோள்களுக்கு பத்திற்கும் அதிகம்!
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சனியின் துணைக்கோள்கள் அவ்வளவு பெரியவை அல்ல. ஒவ்வொன்றும் 3 தொடக்கம் 5 கிமீ விட்டம் கொண்டவையே.
இந்தக் கோள்களை பற்றிய ஒரு அசாதாரணமான விடையம் என்னவென்றால், இவற்றில் 17 கோள்கள் சனியின் சுழற்சித் திசைக்கு எதிர்ச் திசையில் சனியை சுற்றிவருகின்றன. முன்னொரு காலத்தில் சனியுடன் இடம்பெற்ற பாரதூரமான மோதல் ஒன்றினால் இந்தத் துணைக்கோள்களின் சுற்றுப் பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
படவுதவி: NASA/JPL-Caltech/Space Science Institute
சனி வாயுவால் உருவான கோள் என்பதால் அது நீரில் மிதக்கும்! ஆனால் பூமியோ பெரும்பாலும் பாறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
M Sri Saravana, UNAWE Sri Lanka