ஒரு முகிழ் மீன் முழு விண்மீனாகும் வரையில் பாரிய வெப்பநிலை மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இவை ஈர்ப்புவிசையால் ஒடுங்கும் போது -250 பாகை செல்ஸியஸ் வெப்பநிலையில் இருந்து 40,000 பாகை செல்ஸியஸ் வரை (மேட்பரப்பில்) வெப்பநிலை அதிகரிக்கிறது.
ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் டட்டூன் கோளில் இருந்து வானை பார்ப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். இரண்டு சூரியன்கள் அருகருகில்...
நாம் பாடசாலையில் வடிவியல் கற்கும் போது பல உருவங்களின் அளவுகளை பற்றியும் வடிவங்கள் பற்றியும் கற்கின்றோம். அதே போல விண்மீன்களும் கோள்களும் கூட வேறுபட்ட வடிவியல் கட்டமைப்புகளை கொண்டுள்ளன.
கோள்களின் பிறப்பிடத்தின் வடிவியலைப் பற்றி படிப்பதன் மூலம் வேறுபட்ட சூழ்நிலைகளில் எப்படி கோள்கள் உருவாகின்றன என்று விண்ணியலாளர்களால் அறிந்துகொள்ள முடியும்.
வாயுத் திரள் ஒன்றோடு ஒன்று நெருங்கிவர மெதுவாக இவை சுழல ஆரம்பிக்கும். இவ்வேளையில் முகிழ் மீனைச் சுற்றி தட்டையான தகடு போன்ற அமைப்பு ஒன்று உருவாகும். இந்த தகடு போன்ற பிரதேசத்தில் இருக்கும் வாயுக்களும் தூசுகளும் விண்மீனிற்கு உணவாகும் கொஞ்சம் கொஞ்சமாக பேருக்கும் முகிழ் மீன் ஒரு கட்டத்தில் போதுமானளவு வளர்ந்து வெப்பத்திரளாக மாற்றமடையும்.
இதன் பின்னர் அந்த தகட்டில் எஞ்சிய வாயுக்களும் தூசுகளும் விண்மீனைச் சுற்றி வளையம் போன்ற அமைப்பில் உருவாகும். முகிழ் கோளத் தகடு (protoplanetary disk) என அழைக்கப்படும் இந்தப் ப்குதியில் தான் கோள்கள் உருவாகும்.
இந்த பிரதேசம் வெறும் ஒரு விண்மீனைச் சுற்றி மற்றும் உருவாவதில்லை. இரண்டு விண்மீன்கள் பிறக்கும் போது அவை ஒன்றை ஒன்று சுற்றிவரும் இதனை இரட்டை விண்மீன் தொகுதி என அழைக்கிறோம். மொத்த கோள்களில் பாதிக்கும் மேற்பட்ட கோள்கள் இரட்டை விண்மீன் தொகுதிகளில் தான் இருக்கின்றன என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.
விண்ணியலாளர்கள் இரட்டை விண்மீன் தொகுதிகளை சுற்றியுள்ள முகிழ் கோளத் தகடுகளை பற்றி ஆய்வுகளை செய்கின்றனர். இவர்களை ஆச்சரியப்படுத்தும் ஒருவிடையம் என்னவென்றால் இந்த தகடுகளின் வடிவியல் கட்டமைப்புகள் அவ்வளவு எளிமையானவை அல்ல. மேலும் இந்தத் தகடுகள் இரண்டு விண்மீன்களின் சுற்றுப் பாதையுடனும் பொருந்துவதாகவும் இல்லை. அதிலும் குறிப்பாக இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று சுற்றிவர நீண்ட காலம் எடுக்கும் பட்சத்தில் இந்த தகடுகளில் அமைப்பு மிக மிக சிக்கலானதாக காணப்படுகிறது.
எனவே விண்ணியலாளர்கள் விண்மீன்களுடன் பொருந்திவராத ஆனால் அவற்றை சுற்றிவரும் கோள்களைக் கூட எதிர்காலத்தில் நாம் கண்டறியலாம் என கருதுகின்றனர்.
படவுதவி: NRAO/AUI/NSF, S. Dagnello
ஒரு முகிழ் மீன் முழு விண்மீனாகும் வரையில் பாரிய வெப்பநிலை மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இவை ஈர்ப்புவிசையால் ஒடுங்கும் போது -250 பாகை செல்ஸியஸ் வெப்பநிலையில் இருந்து 40,000 பாகை செல்ஸியஸ் வரை (மேட்பரப்பில்) வெப்பநிலை அதிகரிக்கிறது.
M Srisaravana, UNAWE Sri Lanka