சில்லியில் இருந்து அவதானித்த அழகிய விண்மீன் தாரைகள்
31 ஜனவரி, 2022

விண்மீன் தாரைகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இத் தாரைகள் விண்மீன்கள் பிறக்கும் போது பொதுவாக உருவாகும் கட்டமைப்பாகும். இளம் விண்மீன்களின் காந்தப்புலங்களின் எதிர்வினையால் விண்மீன்களைச் சுற்றி இருக்கும் தூசுகள், வாயுக்கள் தாரைகளாக மாறுகின்றன என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். இவ் எதிர்வினைகள் அயனாக்கப்பட்ட வாயுக்கள் படத்தில் உள்ளது போல எதிரெதிர் திசைகளில் சிதறக் காரணமாகிறது.

சில்லியில் உள்ள ஆண்டிஸ் பகுதியில் இருக்கும் ஜெமினி தெற்கு தொலைநோக்கி மூலம் இவ் அழகிய புகைப்படம் விண்ணியலாளர்கள் குழுவால் படம்பிடிக்கப்பட்டது. MHO 2147 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்மீன் தாரகை பூமியில் இருந்து 10,000 ஒளியாண்டுகள் தொலைவில் தனுசு மற்றும் ஒபிச்சுயஸ் ஆகிய விண்மீன் குலாமிற்கு இடையில் அமைந்துள்ளது.

தாரகையின் வடிவம் அதனை உருவாக்கிய விண்மீனில் தான் தங்கியுள்ளது. MHO 2147 ஐ பொறுத்தவரை அதனது தாய் விண்மீன் IRAS 17527-2439 எம்மால் அவதானிக்க முடியாதளவு பிரகாசம் குறைந்ததாக இருக்கிறது. இதற்குக் கரணம் அகச்சிவப்பு கதிர்களால் ஊடுருவ முடியாத முகில்களுக்கு (அடர்த்தியான, குளிரான வாயுக்கள் நிரம்பிய பிரதேசம்) அப்பால் இந்த விண்மீன் இருப்பதாலாகும்.

MHO 2147 இன் தாரைகள் அருவி போல இருப்பதற்கு காரணம் காலப்போக்கில் தாரைகளின் திசை மாரியதேயாகும். மேலும், S வடிவ அமைப்பிற்குக் காரணம் தொடர்ச்சியாக தாய் விண்மீனில் இருந்து வெளிவரும் காந்தப்புலக் கதிர்வீச்சாகும். தாரைகளின் திசை மாற்றத்திற்கு மற்றுமொரு காரணம் அருகில் இருக்கும் ஏனைய விண்மீன்களின் ஈர்ப்புவிசை என்றும் விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். 

IRAS 17527-2439 விண்மீன் 300 பில்லியன் கிலோமீட்டர்கள் இடைவெளியில் சுற்றிவரும் மூன்று விண்மீன்களின் தொகுதியில் ஒரு அங்கமாகும்!

படவுதவி:International Gemini Observatory/NOIRLab/NSF/AURA. 

Acknowledgements: Image processing: T.A. Rector (University of Alaska Anchorage/NSF’s NOIRLab), M. Zamani (NSF’s NOIRLab) & D. de Martin (NSF’s NOIRLab) PI: L. Ferrero (Universidad Nacional de Córdoba)

ஆர்வக்குறிப்பு

மேலே உள்ள படத்தை உருவாக்க விண்ணியலாளர்கள் ஜெமினி தெற்கு தொலைநோக்கியின் அடப்டிவ் ஆப்டிக்ஸ் படக்கருவியினை பயன்படுத்தியுள்ளனர். அடப்டிவ் ஆப்டிக்ஸ் எனப்படுவது வளிமண்டலத்தில் ஏற்படும் அசைவுகளால் விண்மீன்கள் மின்னுவதையும், தெளிவில்லாமல் போவதையும் தடுப்பதற்கான ஒரு உத்தியாகும். 

This Space Scoop is based on a Press Release from NOIRLab .
NOIRLab

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்