பிரபஞ்சத்தில் இருக்கும் மிகவும் வயதான பொருட்களில் இந்த வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன்களும் அடங்கும், ஏனென்றால், இவை ஒரு விண்மீனின் (நமது சூரியன் உட்பட!) கடைசிக்காலத்தின் அம்சமாகும்.
கோடை காலத்தில் எப்படி நாம் தடிப்பான ஆடைகளை களைந்துவிட்டு மெலிதான ஆடைகளை அணிவோமோ, கோள்களும் மிகவும் வெப்பமான சூழ்நிலையில் தனது வளிமண்டலத்தின் மேட்ப்புறத்தை இழந்துவிடும்.
சிலி பாலைவனத்தில் இருக்கும் பெரிய தொலைநோக்கி கொண்டு விண்ணியலாளர்கள் வளிமண்டலத்தை இழந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய கோளை கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இது சாதாரணமான ஒரு கோள் அல்ல.
இது ஒரு தனித்துவமான கோள். ஏனென்றால் இது வெள்ளைக்குள்ளன் வகை விண்மீனைச் சுற்றிவருகிறது.
சூரியனைப் போன்ற ஒரு விண்மீன் தனது எரிபொருளை முடித்தவுடன் உள்நோக்கி சுருங்கத்தொடங்கும். விண்மீனில் இருக்கும் பருப்பொருள் எல்லாம் மையத்தில் செறிவாக பந்துபோல குவிக்கப்படும். இந்தப் பந்துபோன்ற அமைப்பே வெள்ளைக்குள்ளன் என அழைக்கப்படுகிறது. குறித்த விண்மீன் வெளிப்புற வாயுக்களை இழந்துவிடும், இவ்வாயுக்கள் பிரபஞ்சம் நோக்கி விரிவடையும்.
இந்த வெள்ளைக்குள்ளன் - கோள் சோடி எதிர்காலத்தில் எமது சூரியத்தொகுதி எப்படியிருக்கும் என படம்பிடித்துக்காட்டுகிறது, காரணம், நமது சூரியன் கூட எதிர்காலத்தில் ஒரு வெள்ளைக்குள்ளன் வகை விண்மீனாகவே மாற்றமடையும்.
படவுதவி: ESO/M. Kornmesser
பிரபஞ்சத்தில் இருக்கும் மிகவும் வயதான பொருட்களில் இந்த வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன்களும் அடங்கும், ஏனென்றால், இவை ஒரு விண்மீனின் (நமது சூரியன் உட்பட!) கடைசிக்காலத்தின் அம்சமாகும்.
M Sri Saravana, UNAWE Sri Lanka