நமது பால்வீதியின் மையத்தில் இருக்கும் கருந்துளை Sagittarius A* என அழைக்கப்படுகிறது. இது நமது சூரியனைப் போல 4.5 மில்லியன் மடங்கு திணிவு கூடியது!
கண்ணாம்மூச்சி ஒரு மகிழ்ச்சியான விளையாட்டு, ஆனால் கருந்துளை ஒன்றுடன் விளையாடும் போது அது எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருக்குமென்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.
குறள் விண்மீன் பேரடையில் இருக்கும் கருந்துளைகளை கண்டறிய விண்ணியலாளர்களும் அதைத்தான் செய்கிறார்கள். குறள் விண்மீன் பேரடைகள் சாதாரண பேரடைகளை விடச் சிறியவை. அவற்றில் சில பில்லியன் விண்மீன்களே இருக்கும். ஆனால் சாதாரண விண்மீன் பேரடை ஒன்றில் நூறு பில்லியன் கணக்கான விண்மீன்கள் இருக்கும்.
பெரிய பேரடைகளில் அவற்றின் மத்தியிலே கருந்துளை காணப்படும். பால்வீதியை விட 100 மடங்கு திணிவு குறைந்த குறள் விண்மீன் பேரடைகளில் புதிதாக கண்டறியப்பட்ட 13 கருந்துளைகள் குறள் விண்மீன் பேரடைகளில் நிலை அப்படியல்ல என்று எமக்கு சொல்கின்றன. விண்ணியலாளர்கள் இந்தக் கருந்துளைகள் குறள் விண்மீன் பேரடைகளின் வெளிப்புற எல்லைகளில் அலைந்து திரிவதை கண்டறிந்துள்ளனர்.
இதற்கான காரணம் என்ன? பெரும்பாலும் ஒரு காலத்தில் இந்தப் பேரடைகள் வேறு பேரடைகளும் மோதி ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
படவுதவி: Image credit: Sophia Dagnello, NRAO/AUI/NSF
நமது பால்வீதியின் மையத்தில் இருக்கும் கருந்துளை Sagittarius A* என அழைக்கப்படுகிறது. இது நமது சூரியனைப் போல 4.5 மில்லியன் மடங்கு திணிவு கூடியது!
M Sri Saravana, UNAWE Sri Lanka